இன்றே எம்மை அழையுங்கள்

Sheriff Sole and Madej நிறுவனத்தில் நாம் உங்களது தேவைகளிலும் உங்களது கடன் பிரச்சினைகளுக்கான அதிசிறந்த தீர்விலும் கவனம் செலுத்துகிறோம். உங்களது வாழ்க்கையை மீண்டும் முறையாகச் செல்ல உதவுவோம். தமிழில் இலவச ஆலோசனைக்கு, Keerthana (கீர்த்தனா) வை அழையுங்கள் 416-391-7444 kjayasivathasa@trustee.ca எமக்கு Ontarioஇல் 12 வசதியான இடங்கள் இருக்கின்றன.

சேகரிப்பு அழைப்புக்களை நிறுத்துங்கள்

வழமையாக தொந்தரவான அழைப்புக்களைப் பெறுவது அதிகரித்துச் செல்லலாம். நாம் கடன் வழங்கியோர், சேகரிப்பு முகவர்கள் ஆகியோரிடமிருந்து எல்லா அழைப்புக்களுக்கும் ஒரு முடிவு கட்டலாம்.

கடன் அட்டை கடன்

குறைந்த பட்ச கொடுப்பனவுச் சக்கரத்தில் அகப்பட்டுக் கொண்டீர்களா? நீங்கள் வழமையாக உங்களது கடனட்டைக் கொடுப்பனவுகளில் தாமதமாகிறீர்களா? நாம் உங்களுக்கு உங்களது கடன் அட்டை கடன்களிலை இல்லாதொழிக்க உதவலாம்.

வேதனத் துண்டாடல்

நுகர்வோர் முன்மொழிவு அல்லது கையறவுக் கோப்பிடுவது உடனடியாக வேதனத் துண்டாடலை நிறுத்த உதவலாம், யாவும் சட்டப்படி நடவடிக்கைகளே

CRA வரிக் கடன்

நீங்கள் உங்களது CRA கடனைக் கொடுக்கத் திண்டாடுகிறீர்களா? நாம் உங்களுக்கு CRA இல் உங்களது வரிக் கடனை இல்லாதொழிக்க உதவவும் உங்களுக்கு கடன் பரிகாரம் வழங்கவும் செய்யலாம்

சம்பள நாள் கடன்

சம்பள நாள் கடன்கள் (Money Mart, Pay2Day, Cash Money, Cash 4 You, etc.) ஏராளமானோருக்கு மிக வசதியானவையாகத் தோன்றலாம், ஆயினும் வானளவு உயர்ந்த வட்டியில் அவற்றைத் திருப்பிக் கொடுப்பது மிகச் சவாலானதாக இரு்ககலாம். நாம் உங்களுக்கு உங்களது சம்பள நாள் கடனைச் சமாளிக்க உதவுவோம்

நாம் உங்களுக்கு எப்படி உதவலாம்

எமது அணியினால் ஆகப் பொதுவாக வழங்கப்படும் சேவைகள் வங்குரோத்து, நுகர்வோர் முன்மொழிவுக் கோப்பிடல்களாகும். நுகர்வோர் முன்மொழிவு அல்லது வங்குரோத்து ஒன்றின் மூலம் நீங்கள் உங்களது பாதுகாப்பற்ற கடன்கள் யாவற்றையும் ஒரேயடியாகவும் எல்லாவற்றையும் விட்டொழிக்கலாம்.

நுகர்வோர் முன்மொழிவு என்றால் என்ன?

நுகர்வோர் முன்மொழிவு என்பது வங்குரோத்தான ஆட்களுக்கு தமது கடன்களை ஒரு மாதாந்தக் கொடுப்பனவாக ஒன்று சேர்க்க உதவும் ஒரு கடன் பரிகாரத் தெரிவு ஆகும். இது கடன்பட்டுள்ள தொகையின் ஒரு பகுதியைச் செலுத்துவதற்காக கடனாளிக்கும் அவருக்குக் கடன் கொடுத்தவருக்கும் இடையிலான ஒரு சட்டச் செயன்முறை ஆகும். உத்தரவு பெற்ற கையறவு நம்பிக்கையாளர் ஒருவர் கடன் தொகையைக் குறைக்கவும் வட்ட விதிப்புக்களை நிறுத்தவும் கடன் கொடுத்தோருடன் கடனாளியின் சார்பாக பேச்சுவார்த்தை நடத்துவார். முதன்மைக் குறைப்பு வழமையாக 50% - 75% இற்கு இடைப்பட்டதாகும். கொடுக்க வேண்டிய கடன் உங்களது வருமானம், சொத்துக்குள், மொத்தக் கடன் சுமை என்பவற்றைப் பொறுத்ததாகும். நம்பிக்கையாளரின் கொடுப்பனவுகளும் உங்களது மாதாந்தக் கொடுப்பனவில் உள்ளடக்கப்படுகின்றன.

வங்குரோத்து என்றால் என்ன?

வங்குரோத்து என்பது ஆட்களுக்கு கடன் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் மற்றொரு கடன் பரிகாரத் தெரிவு ஆகும். பெரும்பாலான சூழ்நிலைகளில் ஆட்களுக்கு எல்லாச் சொத்துக்களையும் வைத்திருக்க இயலுமாகும்.

North York
Midtown Yonge and Eglinton
Markham
Mississauga Airport Rd.
Mississauga Downtown
Pickering / Ajax
Vaughan
Scarborough
Brampton
Barrie
Hamilton
Kitchener